நுரை பொங்கிய நொய்யல்! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி !!!

சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு மற்றும் சாக்கடைக்கழிவு நீரும் நுரையுடன் கலந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஆரம்பித்து ஜீவ நதியாக ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் நுரையுடன் கூடி கருமை நிறமாக வருகிறது.

 

மேலும்,சாலையில் வருபவர்கள் மீது நுரை கலந்த சாக்கடை கழிவுநீர் நுரையாக காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது.இதனால் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply