ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது அதகுறித்தெல்லாம் நடவடிக்கை மேற் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த பயனும் தந்திடாத முத்தலாக் விசயத்தை கையில் எடுத்து கொண்டு பாராளுமன்றத்தில் 30-07-2019 செவ்வாய் கிழமை அன்று முத்தலாக் தடை சட்டத்தை அவசரமாக நிறை வேற்றிய மத்திய பா ஜ க அரசின் இத்தகை செயல் இஸ்லாமிய சமுதாயத்தை பழி வாங்கும் செயலாகும்.
முத்தலாக் , இஸ்லாமிய பெண்களை பாதிக்கின்றது என்று இவர்கள் சொல்லு முத்தலாக் கொடுக்கும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்துள்ளார்கள்.
சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக்குவது ஜனநாயக மரபல்ல சிறுபான்மையினரின் மத உரிமைகளில் தலையிடுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறிச்செய்யும் சட்ட முரனாகும்.
முத்தலாக் தடை சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.