கோவையில் மாநில அளவிலான யோகா போட்டி

கோவையில் 3வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.கோவை நீலாம்பூர் டெக்லதான் மைதானத்தில் ஆனந்தம் யோகா சார்பில் 3வது மாநில அளவிலான யோக சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது .13 வகையில் நடைபெற்ற யோகா போட்டியில் 5 வயது முதல் 100வயது வரையிலான குழந்தைகள் பெரியோர்கள் என தமிழகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கபதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்படுவதுடன் தாய்லாந்த் மற்றும் அந்தமானில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

யோகா போட்டி குறித்து ஒருங்கிணைப்பாளர் எல்லுச்சாமி செய்தியாளரிடம் பேசிய போது இந்தியாவின் கடந்தகால யோகா கலாச்சார பாரம்பரியத்தை இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் பெருமளவில் திறந்திருக்கும் யோகா அறிவியலை மனிதர்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டிகள் நடத்தப்படுவதாகவும், யோகா போட்டியில் பத்மஸ்ரீ விருதை பெற்ற 100வயது ஞானம்மாள் போல் எல்லோரும் வர வேண்டும் என்று தெரிவித்தார்.


Leave a Reply