தனுஷின் நடித்து வரும் D39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இந்நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி படம் D39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அந்த அறிவிப்பின் படி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு பட்டாசு என டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகாவும் மெக்ரின் பிரசாடாவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.