கோவை 100 அடி சாலையில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சர் பேபி அவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் திருத்தம் செய்ய வேண்டாம்.முற்றிலும் கைவிடப்பட வேண்டும். இது குறித்து சிபிஎம் கட்சி சார்பாக தமிழகத்தில் 5000 த்திற்கு மேற்பட்ட தெரு முனை கூட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்த புதிய கல்வி கொள்கை குறித்து மக்களிடம் எந்தவொரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என மத்திய அரசை குற்றஞ்சாட்டினார்.
மேலும்,அரசு பள்ளிகளைக் மூடிவிட்டு இலவச கல்வி சாத்தியமா ? எனவும், காசு உள்ளவர்கள் தான் உயர்கல்வி என்று இந்த அறிக்கையில் சொல்லியிருப்பது நவீன தாரளமான கொள்கையைக் புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு புகுத்தியிருக்கிறது எனவும் குற்றஞ்சாட்டி பேசினார்.
கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சர் பேபி பேசுகையில் இந்த கல்வி கொள்கை குறித்து சிபிஎம் கட்சி சார்பில் கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து ஒரு தெளிவான அறிக்கையைக் நாங்கள் தயார் செய்துள்ளோம்.அந்த அறிக்கையை சீத்தாராம் யெச்சூரி அவர்கள் மோடியிடம் வழங்கவுள்ளார்.இந்தியாவில் மொழி வாரியாக சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டது தெரிந்தும்,ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கல்வியைக் ஆர்.எஸ்.எஸ் கொள்ளைக்கு ஏற்றார் போல் வடிவமைக்கிறார்கள்.இந்த புதிய கல்வி கொள்கை பண்முக தன்மைக்கு எதிரானது – பேபி அனைத்து மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் .ஒரு சில மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது என பேசினார்.செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் புதிய கல்வி கொள்ளை குறித்து பாரதி புத்தகாலயம் சார்பில் போஸ்டர்கள் வெளியிட கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சர் பேபி பெற்று கொண்டார்.