டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி நல்லாசிரியர் விருது

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது அன்றைய தினம் தகுதியுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

 

இந்தாண்டு, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய 17 வழிகாட்டு நெறிமுறையை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.அரசியல் கட்சி சாராதவர்கள், நேர்மை தவறாமை, சுய ஒழுக்கம், மாணவர் மற்றும் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பாடுபடுபவர்கள், தனியாக டியூஷன் எடுக்காதவர்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு பரிந்துரைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.


Leave a Reply