மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்! ஓட்டுநர் கைது

Publish by: --- Photo :


வாழப்பாடி அருகே தனியார் செவிலியர் கல்லுரி மாணவிக்கு திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தனியார் பேருந்து நடத்துநரை வாழப்பாடி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். வாழப்பாடி சிலோன் காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல். வயது 25. சேலம்-ஆத்துர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

இவருக்கு, ஏற்கெனவே இரண்டு திருமணமாகி கோகிலா, மாரியம்மாள் என இரு மனைவிகள் உள்ளனர். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது தெரியவந்ததால், கோகிலா, இவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.

 

இந்நிலையில், ஆத்துர் செல்லியம்பாளையம் பகுதியில் இயங்கும் தனியார் செவிலியர் கல்லுரிக்கு, சக்திவேல் நடத்துனராக இருக்கும் பேருந்தில் வந்து சென்ற பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகளுடன் நெருங்கிப் பழகியுள்ளார்.தனக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளதை மறைத்த சக்திவேல், அந்த மாணவிக்கு திருமண ஆசை காட்டி, தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீஸிலில் வெள்ளிக்கிழமை புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், இரண்டு மனைவிகளின் கணவரான சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வேரேதேனும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? என்பது குறித்தும் வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply