ஏ‌சி வைத்திருந்தால் ரேஷன் பொருட்கள் ரத்து? அமைச்சர் காமராஜ் பதில்

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளை மூடும் பணியை மத்திய அரசு துரிதமாக செய்து வருவது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வீடுகளில் ஏ.சி. உள்ளிட்ட பல அம்சங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் குடும்ப அட்டைக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தப்பட்டியலில் தொழில் வரி செலுத்துவோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள், மத்திய மாநில உள்ளாட்சி அமைப்புகள் பணியாற்றுபவர்கள், ஓய்வு பெற்றவரை கொண்ட குடும்பம், நான்கு சக்கர வாகனத்தை சொந்தமாக வைத்திருக்கும் குடும்பம், ஏசி வைத்திருக்கும் குடும்பம், மூன்று அல்லது அதற்கு மேல் உள்ள அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகளில் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகளைப் பயன்படுத்த முடியாது என அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு உள்ளன.

 

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் காமராஜ் இது தவறான தகவல். பொதுமக்கள் அனைவருக்கும் பொது விநியோக முறையில் அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.


Leave a Reply