கலிபோர்னியாவில் கடலில் துள்ளிக் குதித்த டால்பின்!

கலிபோர்னியாவில் டால்பின்களின் அணிவகுப்பு.அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில், டால்பின்கள் அணிவகுத்து துள்ளிக்குதித்து செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கலிபோர்னியாவின் தெற்கே உள்ள லகுணா கடலில், சான் கிளமென்ட் பாட்டர்சன் என்பவர் தனது நண்பர்களுடன் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டார்.

 

அப்போது அவர்கள் சென்ற படகுக்கு அருகே திடீரென தண்ணீருக்கு மேல் எழுந்த நூற்றுக்கும் மேற்பட்ட டால்பின்கள், வரிசையாக அணிவகுத்தபடி துள்ளிக்குதித்து சென்றன. சுமார் 25 நிமிடங்கள் நிகழ்ந்த டால்பின்களின் அழகிய அணிவகுப்பு காட்சியை உடனடியாக படம் பிடித்த பாட்டர்சன், அதனை இணையதளங்களில் பகிர்ந்து வருகிறார்.


Leave a Reply