நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! கூலி தொழிலாளி கைது

பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலி புதூரை சேர்ந்தவர் காளிதாஸ், வயது 25. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார் . இப்படியிருக்க காளிதாஸ் அதே பகுதியை சேர்ந்த உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவியை கற்பழிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. அந்த மாணவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

 

அப்போது காளிதாஸ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக கோட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசிற்கு இந்த புகார் மாற்றப்பட்டது. அதனையடுத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Leave a Reply