நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வேண்டி பூஜைகள்

தமிழகத்தில் இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய தனுஷ் தலைமை மன்றம் சார்பாக சென்னையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மும்பை, கேரளா கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பங்கேற்கின்றனர்.

இதனை தொடர்ந்து ரத்த தானம் முகம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றும் இனி வெளியாகும் தனுஷ் படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று கோவை மாவட்ட தலைமை தனுஷ் மன்றம் சார்பாக டவுன்ஹால் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீகோனியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதன்பின் அங்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பழங்களை வாங்கி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.இதில் தனுஷ் மன்ற மாவட்ட தலைவர் மணி, செயலாளர் சங்கர், பொருளாளர் அந்தோணி, வடக்கு நகர தலைவர் அருள்முருகன்,அமைப்பாளர் வினோத், துணை செயலாளர் பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


Leave a Reply