வட கொரியாவில் கால் வைத்து வரலாறு படைத்தார் டிரம்ப்

உலக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வட கொரியா மண்ணில் அமெரிக்க அதிபர் ஒருவர் காலடி எடுத்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. காலம் காலமாக பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்கவும் , வட கொரியாவும் சமீப காலமாக நெருங்கி வருகின்றன.

 

அணு ஆயுதங்களை சட்ட விரோதமாக வட கொரியா உருவாக்கி வருகிறது என்பதே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முக்கிய குற்றச்சாட்டு அதன் எதிரொலியாக வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அந்த தடையை நீக்குவது தொடர்பாக டிரம்ப், கிம் இடையே ஏற்கனவே 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றங்கள் எதும் ஏற்படவில்லை.

 

இந்நிலையில் இவரை வட கொரிய எல்லைக்குள் தாம் சந்திக்க விரும்புவதாக டிரம்ப் தன்னிடம் ட்விட்டர் மூலம் விருப்பம் தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பதற்கான சந்திப்பை வட கொரியா ஏற்படுத்தி தந்தது. தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து தென் கொரிய, வட கொரிய எல்லையில் உள்ள இரு நாட்டிற்கும் பொதுவான ராணுவம் விலக்கி கொள்ளப்பட்ட பகுதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை வட கொரிய அதிபர் அழைத்து சென்றார்.அங்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை டிரம்ப் சந்தித்தார்.

பின்னர் கிம்முடன் பேசிய படியே வட கொரியா எல்லைக்குள் டிரம்ப் சிறிது தூரம் நடந்து சென்றார். அங்கு இரு நாட்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்கு கொண்டனர். பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் வட கொரியா மண்ணில் கால் பதிப்பது இதுவே முதன் முறை. இந்த வரலாற்றை படைத்த அமெரிக்கா அதிபர் என்கிற பெருமை டிரம்பிற்கு கிடைத்துள்ளது. பின்னர் தென்கொரிய பகுதியில் வட கொரிய அதிபரும் , அமெரிக்க அதிபரும் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர்.

 

இந்த சந்திப்பின் போது விதிகளை மீறி அணுஆயுதங்களை உருவாக்குவதை முழுமையாக கை விட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியதாகவும், தங்கள் நாடு மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என டிரம்பிடம் கேட்டு கொண்டுள்ளனர்.


Leave a Reply