கோவையில் மாநில அளவிலான கபாடி போட்டி.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 95 அணிகள் பங்கேற்பு.

Publish by: --- Photo :


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில அளவிலான 6 ஆம் ஆண்டு கபாடி திருவிழா நடைபெற்று வருகிறது.தேக்கம்பட்டி விளையாட்டுக்குழு நண்பர்கள்,சிவக்குமார் விளையாட்டுக்குழு நண்பர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்களின் சார்பில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சேலம் ,ஈரோடு, திருப்பூர்,கன்னியாகுமரி,ராமநாதபுரம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 95 அணிகள் கலந்து கொண்டு இப்போட்டியில் விளையாடி வருகின்றனர்.

ஆல் இண்டியா கபாடி பெடரேஷன் ஆப் இந்தியா விதிமுறைகளின் படி இப்போட்டியானது நடைபெற்று வருகிறது.தேக்கம்பட்டி விளையாட்டுக்குழு தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கபாடி போட்டியில் முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்,இரண்டாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய்,மூன்றாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

 

முதல் நாளான நேற்று இந்த கபாடிப்போட்டியினை நூற்றாண்டு விழா கண்ட 104 வயது பாட்டி பாப்பம்மாள், தேக்கம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.போட்டியானது பல சுற்றுக்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கோப்பையை வெல்லும் முனைப்பில் கபாடி வீரர்கள் களத்தில் இறங்கி தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.இறுதிப்போட்டியானது இன்று நடைபெற உள்ளது.

இறுதி போட்டியில் அனல் பறக்கும் என்பதால் பொதுமக்கள்,விளையாட்டு வீரர்கள் திரண்டு வந்து போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான கபாடி போட்டியை காண சுற்றுவட்டாரப்பகுதிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்து கண்டு ரசித்து வருகின்றனர்.


Leave a Reply