பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 5 இளைஞர்கள் கைது!பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் ?

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட முகமது கபீர், முகமதுநியாஸ், வசந்தகுமார், முகமது ஆர்சத், கமர்தீன் உள்ளிட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முகமது கபீர் மீது மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆனைமலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் முகமது சபீர். இவரது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் இவர்கள் 5 பேரும்  பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறித்து செல்போன்களில் படம் பிடித்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும்,மாணவிகளின் புகைப்படங்களை பேஸ்புக்,வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து முகமது ரியாஸ் வசந்தகுமார் முகமது அந்த், கமருதீன் முகமது கபீர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவிகளை மிரட்டியதோடு தட்டிக் கேட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முகமது சபீர் மீது மட்டும்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜே.எம் ஒன்றில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு கொண்டுசெல்ல உள்ளதாக ஆனைமலை காவல்துறையினர் தெரிவித்தனர்.மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஐந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை வழக்கு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படங்கள் எடுத்து மிரட்டி சமூக வலைத்தளங்களில் வாலிபர்கள் வெளியிட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதி மக்களிடையே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply