டாக்டர்கள்,பொறியாளர்கள் உட்பட 9 பெண்களிடம் உறவு கொண்டு ஏமாற்றிய மோசடி ஆசாமி கைது’

திருமண ஆசைகாட்டி டாக்டர்கள்,பொறியாளர்கள் உட்பட 9 பெண்களை ஏமாற்றிய மோசடி ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஐயப்பன் தாங்கலை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் வரன் பார்ப்பதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த சக்கரவர்த்தி என்பவர் அவரை தொடர்பு கொண்டுள்ளார். தாம் மருத்துவராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அவரது பேச்சும் ,பழகும் விதமும் பெண் டாக்டருக்கு பிடித்து போகிறது.

 

எனவே சக்கரவர்த்தியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.  பல இடங்களுக்கும் ஜோடியாக சுற்றி திரிந்த அவர்கள் மிக நெருக்கமாகவும் இருந்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரிடம் தன் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை என கூறி அவரிடம் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு சக்கரவர்த்தி தலைமறைவாகிறார்.

 

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் டாக்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தியை தேடி வந்த போலீசாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. ஐயப்பன் தாங்கல் பெண் மருத்துவரை ஏமாற்றியது போல திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றியதும் அது தொடர்பான வழக்கில் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

 

திருவண்ணாமலையை சேர்ந்த சக்கர்வர்த்தி எம்.இ. படித்து இருக்கிறார். பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் திருமண தகவல் இணையதளங்களில் தனது பெயரை அஜய், அருணாச்சலம்,விஜயகுமார் என பல்வேறு பேர்களில் பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் மருத்துவர் பொறியாளர் என வசதியாக இருக்கும் பெண்களின் விவரங்களை எடுத்து அவர்களிடம் ஆசையாய் பேசி அவர்களது வீட்டிற்கு சென்று பெண்களின் பெற்றோர்களிடம் நன்கு பழகியுள்ளார்.

 

திருமண தேதி எல்லாம் முடிவான பிறகு, பெண்களை வெளியில் அழைத்து சென்று நெருக்கமாக இருப்பார். அந்த சூழலை பயன்படுத்தி தனக்கு பண நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக கூறி கோடி கணக்கில் பணத்தை கறந்து விடுவார். பணம் கைக்கு வந்ததும் ஏதோ ஒரு காரணத்தை காட்டி தலை மறைவாகிவிடுவார். சில பெண்களை திருமணம் செய்தும் ஏமாற்றி இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள்,பொறியாளர்கள் உட்பட 9 பெண்களை ஏமாற்றி மோசடி செய்து 8 கோடி ரூபாய் பணம் பரித்து ஆடம்பர வாழ்கையை வாழ்ந்துள்ளார்.திருச்சி சிறையில் இருந்த சக்கரவர்த்தியை போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Leave a Reply