மழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் யாகம்

ஈரோடு பச்சைமலை சுப்ரமணியன் சாமி கோவிலில் மழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் யாகம் நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து இருக்க கூடிய பச்சைமலை சுப்ரமணியம் சாமி கோவிலில் யாகம் நடைபெறுகிறது. மழை வேண்டி இந்த யாகத்தை நடத்துவதற்காக தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இந்த சிறப்பு யாகமானது நடைபெறுகிறது.

 

மழை வேண்டி நடக்கக்கூடிய இந்த யாகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான இந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக ஆவின் சேர்மென் காளியப்பன், மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக மழை வேண்டி இந்த சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற யாகம் நடத்தப்பட்டது. அதை போலவே தற்போது இந்த யாகம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுபாடானது நிலவி வருகிறது. இந்த சூழலில் இது போன்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த யாகம் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சிறப்பு யாகம் பல்வேறு கோவில்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக இந்து கோவில்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு கிறித்தவ ஆலயங்கள் மற்றும் இஸ்லாமிய தளங்களிலும் இது போன்ற மத நம்பிக்கையில் பல்வேறு தரப்பிலுமே யாகம் நடத்தப்பட்டது.

 

அவர் அவருடைய நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படக்கூடிய யாகம் தொடர்ச்சியாக மழை தரும் என்ற நம்பிக்கையில் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டு வைக்கபடுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுமே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்ட மற்றும் சென்னை பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது.


Leave a Reply