இராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி மு க திட்டமிடல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தி மு க திட்டமிடல்.இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து   இராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் வருகின்ற 22.06.2019 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் இராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதில் மாநில, மாவட்ட  நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக, ஊராட்சி கழக செயலாளர்கள், அனைத்து  அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply