இறப்பிலும் இணை பிரியா கணவன் மனைவி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்களக்குடி அருகே உள்ள கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 92), விவசாயி. இவரது மனைவி சின்னம்மாள் (90). கணவன்-மனைவி இருவரும் இணைபிரியாது வாழ்ந்து வந்தனர்.

 

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக சின்னம்மாள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணம் குறித்து தகவலறிந்த ராமசாமி சோகத்தில் ஆழ்ந்தார். மிகுந்த கவலையில் இருந்த அவர் அடுத்த சில மணி நேரத்தில் இறந்து போனார். இந்த தம்பதிகள் இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததை போல் சாவிலும் இணை பிரியாமல் இயற்கை எய்தி உள்ளனர்.

 

இவர்கள் இருவரும் தங்களது தேவைகளை யாரையும் எதிர்பார்க்காமல் தாங்களே பூர்த்தி செய்து கொண்டனராம். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும், 3 பேரன், பேத்திகளும் உள்ளனர். இவர்களின் உடல் கூகுடி எனும் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Leave a Reply