பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு

Publish by: --- Photo :


தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரங்களை அரசுக்கு அனுப்ப உயர்க்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பல்கலைகழக மானியக்குழு விதிப்படி தகுதியற்ற பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

 

ஆனால் உத்தரவை மீறி பல இடங்களில் தகுதியற்ற பேராசிரியர்கள் பணியாற்றுவதாக புகார் எழுந்தன. இந்நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவின் சுற்றறிக்கையில் பல்கலைகழகங்கள், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், தற்காலிக பேராசிரியர்கள் ஆகியோர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அவர்கள் பணியில் சேர்ந்த காலம் , பணியாற்றும் காலம், கல்வித்தகுதி ,நெட், செட் தேர்வுகள் பி‌எச்‌டி தேர்ச்சி விவரங்களையும் தகுதி அற்ற பேராசிரியர்கள் யாரேனும் பணியாற்றினால் அவர்களது விவரங்களையும் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.