செல் ஃபோன் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த சிஆர்பிஎஃப் ஓய்வு பெற்ற ஆய்வாளரான தங்கராசு என்பவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். இவர் பணிக்கு செல்வதற்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி ஜமாலியாவிற்கு பேருந்தில் சென்ற .போது அவரது செல்போன் திருடப்பட்டது.
இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் தங்கராசு புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படி நடந்துவந்த இரு இளைஞர்களை விசாரித்தபோது அவர்கள் தங்கராசு திருடியது தெரிய வந்தது.
செல்போனை பறிமுதல் செய்ய வந்த போலீசார் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், ராமு ஆகியோரை கைது செய்துள்ளனர். இரண்டு மணி நேரத்தில் செல் ஃபோன் திருடர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.