நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 8கி.மீ தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்

Publish by: --- Photo :


சத்தீஸ்கர் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் எட்டு கிலோமீட்டர் தங்கள் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் 13 வயது சிறுவனுக்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டது.சரியான சாலை வசதி இல்லாததால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தான்.

 

இதனிடையே அந்த கிராமம் வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இந்த தகவல் அறிந்ததும் தூக்கு படுக்கை கட்டி அந்த சிறுவனை தங்கள் தோளில் சுமந்து சென்றனர். சுமார் 8 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சிறப்பான செயலை செய்த வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


Leave a Reply