நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அதில் மதிப்பெண் குறைந்த மாணவிகள் 3 பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தனர்.இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை காந்தி புரம் பெரியார் படிப்பகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது, கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக்கொண்டு நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

நீட் தேர்வு ரத்து செய்யப்படாவிட்டால் மாணவர் தற்கொலை தொடரும் என கூறிய அவர்கள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனையடுத்து அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 15 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply