தலைக்கவசம் அணிந்து வந்தால் இனிப்பு அணியாமல் வந்தால் வழக்கு! காவல் துறையினரின் அசத்தல்

தலைக்கவசம் அணிந்து வந்தால் இனிப்பு அணியாமல் வந்தால் வழக்கு என கடலூர் மாவட்ட போக்குவரத்து துறையினர் அசத்தி வருகின்றனர். கடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கை குலுக்கி பாராட்டினர்.அதே போல தலைக்கவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது. இதனை சுட்டிக்காட்டி நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


Leave a Reply