நிதியாளர் வெட்டி கொலை ,தாய் மகள் உட்பட மூவர் கைது

மதுரை மாவட்டம் தத்தினேரிக்கு அருகே நிதியாளர் ஒருவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் தாய்,மகள் உட்பட மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.இளங்கோவன் ஒருவன் வெட்டி கொல்லபடும் சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. தத்தினேரியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் அதே பகுதியில் நிதி தொழில் செய்து வந்தார்.வீட்டிலிருந்த அவர் கடந்த வெள்ளிக் கிழமை 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லபட்டார்.

 

இந்த வழக்கில் தீடிர் திருப்பமாக இளங்கோவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அபிராமி என்ற பெண் அவரது
மகளுடன் கைது செய்யபட்டுள்ளார். மனைவியை இழந்த இளங்கோவனுக்கு அலங்காநல்லூரை சேர்ந்த அபிராமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கணவரை பிரிந்த அபிராமிக்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில் அவர் இளங்கோவனுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார்.அபிராமியின் மூத்த மகளுக்கு
இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அபிராமி கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொன்றதாக காவல் துறை தரப்பில்
தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக அபிராமி, அவரது மகள் மற்றும்கூலிப்படையை சேர்ந்த 7 பேர் ஆகியோரை கைது செய்துள்ள காவலர்கள் அவர்களிடம்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply