உயிரைக் கொடுத்து 7 உயிரை காப்பாற்றிய விநோதம்! உயிரிழந்த வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தன் உயிரை கொடுத்து 7 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வீரர்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்துள்ளதோடு, மேலும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் என்ற பகுதியை சேர்ந்தவர் தான் அகமதுதார்.இவர் சுற்றுலா வழிகாட்டியாக பால்காம் பகுதியில் பணியாற்றியுள்ளார். பணியின் போது 7 சுற்றுலா பயணிகளுடன் ஆற்றில் படகில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிப்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதில் தத்தளித்து கொண்டிருந்த 7 சுற்றுலா பயணிகளை ஒருவரின் பின் ஒருவராக பத்திரமாக மீட்டுள்ளார்.

 

எதிர்பாராதவிதமாக தார் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கிவிட்டார்.பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஆற்றில் நீண்ட நேரம் உடலை தேடி மீட்டனர். தன் உயிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய தாரின் வீரத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர்.அவரது மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply