உலக கோப்பை கிரிக்கெட்- 136 ரன்களில் சுருண்டது இலங்கை: 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதை அடுத்து பேட் செய்த இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

முன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். 29.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி, 136 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரும் மற்றும் கேப்டனுமான டிமுத் கருணரத்னே 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .

 

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் குப்தில், முன்றோ இருவரும் அரை சதம் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். குப்தில் 73 ரன்களுடனும், முன்றோ 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றி, இலங்கை அணிக்கு நெருக்கடி அளித்த ஆல்ரவுண்டர் மேட் ஹென்றி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


Leave a Reply