--- --:--:-- --

இது என்ன மாயம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

dyrf

இது என்ன மாயம்  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்‘ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

 

இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். நரேந்திரநாத் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

 

 

அடுத்து போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

 

இந்த நிலையில், கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து இப்படி மாறியிருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் மெலிந்த உடலமைப்பை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  கீர்த்தி சுரேஷின் இந்த ஒல்லியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon