நாடு முழுவது பட்டாசு கிளப்பி வரும் பாஜக… தமிழகத்தில் தெறிக்க விட்ட திமுக..

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 478 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 முன்னிலை வகிக்கிறது.

 

இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியம் 342-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கடந்தது.

 

542தொகுதிகளில் முன்னிலை நிலவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தபோது பாரதிய ஜனதா கூட்டணி 348 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களிலும், மாநில கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

தமிழகத்தில் சுமார் 2 மணி அளவில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வந்த நிலையில் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


Leave a Reply