தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்! முதல்வர் பழனிச்சாமி சொல்வது இதுதான்!!

தேர்தலுக்கு பிறகு வெளியாகி உள்ளவை கருத்து கணிப்புகள் அல்ல; அவை கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர் உள்பட 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

 

தமிழக அரசு, விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாது. தற்போதைய சூழலுக்கு தேவை என்பதால் தான், புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிலர் வேண்டும் என்றே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

தமிழகத்தில் தற்போது நிலவும் வறட்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அதிகாரிகளுக்கு உரியமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழக கவர்னர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

 

மக்களவிய தேர்தல் முடிந்தவுடன் கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. அவை, கருத்து கணிப்புகள் அல்ல கருத்துதிணிப்புகள். அ.தி.மு.,க கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெறும் என்று அவர் கூறினார்.


Leave a Reply