கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநில அளவிலான கோடை கால கலைப்பயிற்சி முகாம், திண்டுக்கல் மாவட்டம் கொடைகானலில் நடைபெற்று வருகிறது. இதில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் இதில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
குரலிசை ஆசிரியர் முனீஸ்வரி, பனைஓலை பயிற்சியாளர் தமிழரசி, சிலம்பாட்ட பயிற்சியாளர் லோகசுப்பிரமணியன் ஆகியோர், குழந்தைகளை பயிற்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், விடுமுறை பயனுள்ள வகையில் செலவிடப்படுவதோடு, மாணவர்களும் ஆக்கபூர்வமான சிந்திக்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தி தருகிறது.