குடிநீர், குறுவை பாசனத்திற்கு காவிரியில் தண்ணீர்! உடனே திறந்துவிட வைகோ வலியுறுத்தல்!!

காவிரி டெல்டா குறுவைப் பாசனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்திய கூட்ட வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடும் வறட்சியால், பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் தலைநகர் சென்னை கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து விட்டது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply