எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் ஜூன் 6ஆம் தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

 

நடப்பாண்டு முதல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. வரும் ஜூன் 5ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதை தொடர்ந்து அடுத்த நாள் (ஜூன் 6) மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.

 

அதன்படி, www.tn.health.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் 100 இடங்கள், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் 100 இடங்கள், கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்கள், 15 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 207 இடங்கள் உள்ளன.

 

அரசு பல் மருத்துவ கல்லூரியில், வழக்கம் போல் 100 இடங்கள் உள்ளன. தவிர, 18 தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்கள் உள்ளன. ஜூன் மாதம் 26 ஆம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.


Leave a Reply