65 கோடி ரூபாய் விசைத்தறி நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். – முதல்வர் எடப்பாடி அதிரடி

சூலூர் சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி இன்று சின்னியம்பாளையம்,வாகராயம்பாளையம்,கிட்டாம்பாளையம் ,சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது,அவர் பேசுகையில் தேர்தல் இது பிரச்சார கூட்டம் அல்ல,வெற்றி பெற்ற பிறகு நன்றி அறிவிப்பு கூட்டம் போல இருப்பதாக கூட்டத்தை பார்த்து எடப்பாடி பேசினார்.

 

களத்திலே பல கட்சிகள் இருந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும். எதிர்கட்சி வெற்றி பெற மாட்டார்கள்.அவ்வாறு வெற்றி பெற்றால் மனு கொடுக்க தன்னிடம் தான் வர வேண்டும். இதுவரை தன்னிடம் மக்கள் சார்பாக திமுக எம்.எல்.ஏக்கள் எவரும் தன்னிடம் வரவில்லை.

 

எதிர்க்கட்சியாக கவர்ச்சிகரமான அறிவிப்பை அறிவித்து அதை எப்படி நிறைவேற்றுவார்.

 

திண்ணை பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் குறித்து பேசும் பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பொழுது திண்ணையில் அமர்ந்து கோரிக்கைகள் வாங்கினால் அதனை எப்படி நிறைவேற்றுவார்கள் என கேள்வி எழுப்பிய எடப்பாடி, நிறைவேற்றுவதாக கூறி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார்.

 

தன்னுடைய எடப்பாடி தொகுதியைப்போலவே விவசாயிகளும்,விசைத்தறிகளும்,நெசவாளர்களும் அதிகம் இருக்கிறார்கள்.அவர்களின் கோரிக்கைகள் திறைவேற்றப்படும்.

 

கடந்த திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டால் விவசாயமும்,விசைத்தறித்தொழிலும் நலிவுற்றது.ஆனால்,அதிமுக ஆட்சியில் 750 யூனிட் மின்சாரம் இலவசமாக தரப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே உபரியாக மின்சாரம் தயாரித்த மாநிலம் என மத்திய அரசிடம் விருது பெற்றுள்ளது.

 

65 கோடி ரூபாய் விசைத்தறி நெசவாளர்களின் கடன் தள்ளுபடி,நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெற்ற வீட்டுக்கடன்கள் அசல் மற்றும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

 

மின்மிகை மாநிலமாக இருப்பதால் தான் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்களும்
தமிழகத்தை நோக்கி வருகின்றன.

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தன்னால் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படால் விவசாயமும்,குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

தயாநிதி மாறன்,ஸ்டாலின் கைகளில் தான் 40 டிவி சேனல்கள் உள்ளது.சன் குழும பேக்கேஜ் பார்க்க வேண்டுமானால் 56 ரூபாய் கட்ட வேண்டும்.ஸ்டாலின் அவர்கள் இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும்.அதே போல,திமுக கூட்டணி கட்சியினரிடம் தான் அதிக டிவி சேனல்கள் உள்ளன.அப்படி இருக்கும் பொழுது எப்படி கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பார்கள்,குறைப்பதாக வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறையில் தான் இந்தியாவிலேயே அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகம்.247 துவக்கப்பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது.நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும்,604 உயர்நிலைப்பள்ளிகள் மேனிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

உறுப்பு மாற்று சிகிச்சையில் மூன்று முறை சிறந்த மாநிலமாக விருது வாங்கிக்கொண்டிருக்கிறது.165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

உள்ளாட்சித்துறையில் 20 மத்திய அரசின் விருதுகள் உட்பட எல்லா துறைகளிலும் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.அதனை ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.குறை கூற வேண்டாம்.

 

பெண்களுக்கு என தாலிக்கு தங்கம் திட்டம்,இரு சக்கர வாகனத்திட்டம்,பேறுகால நிதியுதவித்திட்டம் என அம்மா ஆட்சியில் கொடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

 

பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது.பின்னர்,நலிந்தோருக்கு 2 ஆயிரம் கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி ஸ்டாலின் தனது வழக்கறிஞர் மூலம் தடுத்து விட்டார்.தேர்தல் முடிந்த பிறகு நலிந்தோர்க்கு கண்டிப்பாக 2 ஆயிரம் கண்டிப்பாக கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.


Leave a Reply