சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

இராமேஸ்வரம் விட்டிபிள்ளை முடுக்கு தெருவை சேர்ந்த முத்துராமன் வயது 57 ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர் இந் நிலையில், இப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று முத்துராமன் சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

 

இதனால் அலறி அடித்து வெளியே ஓடி வந்த சிறுவன் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளான். இதன்பின் ராமேஸ்வரம் டவுன் இன்ஸ்பெக்டர் திலகராணியிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பின் முதியவரான முத்துராமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply