சபரிமலை ஐயப்பன் கோவில் நடைளா திறப்பு: 5 நாள் பூஜைகள் நடைபெறும்

Publish by: கேரளா பினில் --- Photo : பினில்


சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

 

இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

 

இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 

அதன்பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.


Leave a Reply