மார்ட்டின் அலுவலக காசாளரின் மர்ம மரணம்! அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

லாட்டரி மார்ட்டினின் அலுவலக காசாளரின் மர்ம மரணம் குறித்து, நாளைக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பல்வேறு நிறுவங்களில், கடந்த மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத தொகை சிக்கியதாக கூறப்படுகிறது.

 

கோவையில் நடந்த சோதனையில் போது, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின், கடந்த 3ஆம் தேதி காரமடை அருகே வெள்ளியங்காடு குட்டையில், காயங்களுடன் சடலமாக அவர் மீட்கப்பட்டார்.

 

காசாளர் பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி மற்றும் மகன் ரோஹின் குமார் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மார்ட்டின் நிறுவனத்தை சேர்ந்த இருவரின் பெயரை குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மகன் ரோஹின் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்தார்.

 

 

இவ்வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்று விசாரணைக்கு வந்தது. காசாளர் பழனிச்சாமி சடலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையால் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

 

மேலும், பழனிச்சாமி உடல் நிலை பதப்பட்டுள்ள சூழல், அவரது உடலில் காயங்கள் குறித்து, முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யக்கோரி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.


Leave a Reply