நாளைய பற்றிய சிந்தனை இல்லாத அரசு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று, தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் பேசினார்.
சூலூர் சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளரை ஆதரித்து, சின்னியம்பாளையத்தில் கமலஹாசன் பேசியதாவது:
உங்களுக்காக வந்தவனல்ல நான்.எனக்காக வந்தேன். வெறும் கலைஞனாக மட்டுமே இல்லாமல் எஞ்சிய நாளை மக்களுக்காக வாழ வேண்டி இங்கு வந்துள்ளேன்.
சிறந்த நீர் மேலாண்மை, ஊழலற்ற ஆட்சி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நாளையை நினைவில் கொள்ளுங்கள்..நிச்சயம் நாளை நமதே. டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர் மயில்சாமியை ஆதரியுங்கள் என்றார்.
கமலின் வாகனம் வரும் போது பெண்கள்,இளைஞர், பெண்கள், சிறுவர்,சிறுமியர் என பலரும் சப்தமிட்டு உற்சாக குரல் எழுப்பி, அவரை வரவேற்றனர்.