தேவராட்டம் வெளிவந்த திரையரங்கில் மோதல்

இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் தேவராட்டம் திரைப்படம் வெளியான நிலையில் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த பகவதி குமார் திரைப்படம் பார்க்க வந்துள்ளார் மேலும் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ரகு, கார்மேகம், பாலசுப்பு மகன் மதன்குமார், சுந்தரம் மகன் திருமுருகன், முனியசாமி மகன் செந்தில் ஆகியோர் இந்த திரையரங்கு வந்த நிலையில் பகவதி குமார் மீது தற்போது நடைபெற்ற தேர்தலின் மூலம் முன்விரோதம் காரணமாக தாக்கியதாகவும் அ ம மு க- வுக்கு எதிராகவும் பா ஜ க- வுக்கு ஆதரவாக செயல்பட்ட தாகவும் கூறி தாக்கியதாகவும் 2- பவுன் செயின் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இவர் அளித்த புகாரின் பேரில் இவர்கள் மீது 147, 323, 379 (NH), 506 (i) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கேணிக்கரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது


Leave a Reply