இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக அறிவிப்பு

இலங்கையில், அந்த நாட்டு அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம், கொழும்பு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.

 

இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார் ஜக்ரன் ஹஸிம். இவர், இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு தலைமையேற்று நடத்தியதாக கருதப்பட்டு வந்தது. இலங்கை அரசு, அவரை தேடி வந்தது.

 

இந்த நிலையில், கொழும்புவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த தாக்குதலில் மதகுரு ஜக்ரன் ஹஸிம் கொல்லப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையே அதிபர் சிரிசேனா அளித்த பேட்டி ஒன்றில், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 130 முதல் 140 பேர் இருக்கிறார்கள்; தற்போது 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply