மண்டபம் அருகே கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

Publish by: --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம பாக் ஜல சந்தி கடலுக்கு அடியில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை ஸ்கூபா பயிற்சி பெற்ற 2 பெண்கள் உள்பட 10 வீரர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மண்டபம் வனச்சரக அதிகாரி சதிஷ் தலைமையில் வனவர்கள் குணசேகரன், ஆனந்தன், ஸ்கூபா நீச்சல் பயிற்றுநர் அரவிந்த், தீபிகா, இந்திய வன உயிரின ஆராய்ச்சி கூட மாணவர்கள் மது மகேஷ், ருக்மணி மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் இப்பணியில் ஈடுபட்ட்னர். ஒரு மணி நேரம் கடலுக்கு அடியில் மிதந்தபடியே 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர்.


Leave a Reply