இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 31 பவுன் நகை திருட்டு

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 4 மாதங்களாக 31 பவுன் நகை திருடிய டிரைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பஷீர் என்ற சிங்கம் பஷீர். இவர் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். பெரிய பட்டினத்தில் உள்ள பஷீர் வீட்டில் அவரது தாயார் வசித்து வருகிறார். பெரிய பட்டினம் கிழக்கு தெரு மர்சூக் என்பவர் பஷீர் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் பஷீர் தாயாரை 2018 டிசம்பர் 4 ஆம் தேதி முதல், 2019 ஏப்ரல்12 ஆம் தேதி வரை ஏமாற்றி 31 பவுன் நகையை திருடியதாக, திருப்புல்லாணி போலீசில் பஷீர் புகார் கொடுத்தார்.விசாரணை அடிப்படையில் டிரைவர் மர்சூக் 37, ராமநாதபுரம் எம் எஸ் கே நகர் கவியரசன், நடுத்தெரு செய்ய து அபுதாஹீர் 19, அசன் முகைதீன், முகமது பயாஸ் கான், பைசல் சர் புதின் 23, முகமது யூசுப் கான் 19, பர்ஷித் அலி 18, மேற்கு தெரு சாகுல் ஹமீது 23, கிழக்கு தெரு சுலைமான் 35, கருணை வேல் 43, கற்பககுமார் 47, ரியாஸ் அலி 29 ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருப்புல்லாணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply