இராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.69.80 லட்சம் வசூல்

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் எண்ணப்படுகிறது. ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை இணை ஆணையர்கள் கல்யாணி (ராமேஸ்வரம் ), ஜெகநாதன் (சிவ கங்கை) ஆகியோர் முன்னிலையில் 24/4/2019 மாலை திறந்து எண்ணப்பட்டது. ரூ.69 லட்சத்து 80 ஆயிரத்து 953 ரொக்கம், 103 கிராம் தங்கம், 2 கிலோ757 கிராம் வெள்ளி நகை இருந்தன. ராமநாதசுவாமி கோயில் உதவி ஆணையர் குமரேசன், மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர்கள் ககாரின் ராஜ், பாலசுப்ரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், ஆய்வாளர் கர்ணன், பேஷ்கர்கள் அண்ணா துரை, செல்லம், கலைச்செல்வம், கண்ணன், அறங்காவலர் பிரதிநிதி வீரசேகரன், பள்ளி மாணவ, மாணவியர், கோயில் பணியாளர்கள், கோயில் உழவராப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply