லண்டன் நீதிமன்றம் முன் ராகுலை நிறுத்துவேன்! சொல்வது யாரென்று தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

மோடி என்ற பெயர் உடையவர்கள் திருடர் என்று கூறிய ராகுல் காந்தியை, லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன் என்றி, ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டை அறிமுகம் செய்தவரும், அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடி, முறைகேடு புகாரில் சிக்கி, வெளி நாடுகளுக்கு சென்று தலைமறைவானார்.  இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரத்தில், திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி என்ற வார்த்தை இருக்கிறது என்று பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இது, நிதிமுறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வசிக்கும் லலித் மோடிக்கும் கோபத்தை வரவழைத்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கதில் அவர்  பதிவொன்றை போட்டுள்ளார். அதில், அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுலை, லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன். 50 ஆண்டுகளாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது காந்தி குடும்பம் தான் என்பது உலகத்திற்கே தெரியும் என்று கூறியுள்ளார்.
லலித் மோடியின் இந்த பதிவு, இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கி உள்ளது.

Leave a Reply