நடிகர் ரஜினிக்கு எதிராக புதிய வில்லன் கிளம்பியிருக்கிறார். அதாவது, அவரது தர்பார் படத்தில் புதிய வில்லனாக, பிரதிக் பாபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, அதைவிட இன்னமும் சினிமாய்வ்ல் பிஸியாகவே இருக்கிறார். பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, மீண்டும் நயன்தாரா நடிக்கிறார். பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார்.
இந்த சூழலில், தர்பார் படத்தில் நடிக்கும் வில்லன் தேர்வு நடந்தது. இதில் பாலிவுட் நடிகர் பிரதிக் பாபர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இவர், ஏற்கனவே ‘பாகி – 2′ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.