பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்! உங்கள் மாவட்டத்திற்கு என்ன இடம் ?

பிளஸ் 2 எனப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03%  ஆகும். வழக்கம் போல் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றனர். அவர்களின் தேர்ச்சி விகிதம், 93.64%; மாணவர்களின் தேர்ச்சி 88.57% ஆகும்.
மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை திருப்பூர் தட்டிச் சென்றது. அந்த மாவட்டம் 95.37% தேர்ச்சி விகிதத்துடன், முதலிடத்தையும்; ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடம்; பெரம்பலூர் மாவட்டம், 95.15 சதவீதத்துடன் மூன்றாமிடத்தையும் பெற்றன.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு: கோவை :   95.1 சதவீதம்,  நாமக்கல்:   94.97 சதவீதம்,  கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்,  விருதுநகர்: 94.44 சதவீதம்,  நெல்லை: 94.41 சதவீதம், தூத்துக்குடி: 94.23 சதவீதம்,  கரூர்: 94.07 சதவீதம்,  சிவகங்கை: 93.81 சதவீதம்,  மதுரை: 93.64, சதவீதம்,  நீலகிரி  90.87 சதவீதம், திண்டுக்கல்: 90.79 சதவீதம்.
சேலம்: 90.64 சதவீதம்,  புதுக்கோட்டை: 90.01 சதவீதம், காஞ்சிபுரம்: 89.90 சதவீதம், அரியலூர்: 89.68 சதவீதம்,  தருமர்புரி: 89.62 சதவீதம், திருவள்ளூர்: 89.49 சதவீதம், கடலூர்: 88.45 சதவீதம், திருவண்ணாமலை: 88.03 , சதவீதம், நாகை :87.45 சதவீதம், கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம், திருச்சி: 93.56 சதவீதம், சென்னை: 92.96 சதவீதம்.
தேனி:92.54 சதவீதம், ராமநாதபுரம்: 92.30 சதவீதம், புதுச்சேரி: 91.22 சதவீதம், தஞ்சாவூர்: 91.05 சதவீதம்,  தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன
+2 பொதுத்தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in/,  http://dge1.tn.nic.in/,  http://dge2.tn.nic.in/ மற்றும் https://t.co/ybAzg3pb0A?amp=1 ஆகிய இணையதளங்களில் காணலாம்.

Leave a Reply