ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நாட்டில், மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று, 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  அத்துடன், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கி, ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

 

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் வலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், வாக்காளர்கள் சாதனை படைக்கும் அளவில், பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கை பதிவு செய்ய வேண்டும். முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிகளவில்  வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியாவில் ஜனநாயகத்திற்கான தேர்தல் திருவிழா நடைபெறும் சூழலில், இதை சிறப்பிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் இன்று டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 


Leave a Reply