தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல்18 ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இத்தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வித்தியாசமான முறைகளை கையாண்டு வருகிறார்.இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவினை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு எய்திட தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்திட முன்வரவேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை, 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை, தேர்தல் நாள் – 2019-ஏப்ரல்-18, அனைவரும் வாக்களிப்பீர், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சச வண்ண பலூன் பறக்க விடப்பட்டது. மேலும்,வட கோவையிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடி வளாகத்தில் ரோபோக்கள் மூலம் 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நமது கடமை வாக்களிப்பது என்பதை உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர்.
அதேபோல்,கூட்டுறவு அங்காடி வளாகத்தில் உள்ள கேஸ் சிலிண்டர் குடோனில் 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களையும் ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு அசத்தி வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை செய்தியாளர் -விஜயகுமார்
மேலும் செய்திகள் :
கோவை மாவட்ட மக்களுக்கு கலெக்டரின் எச்சரிக்கை!
துக்க வீட்டில் நடந்த துக்க சம்பவம்..!
விமான நிலையத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்..!
அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு..!
முதலமைச்சரை வழி அனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம்.. கோவையில் பரபரப்பு..!
பள்ளி மாணவியை காப்பாற்றிய காவலர்..நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்..!