மூன்று வாரத்தில் 200 குழந்தைகள் பலி..!
பாகிஸ்தானில் கடும் குளிரினால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடுமையான குளிர்நிலை வருகிறது. இதன் காரணமாக ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி இருந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வார காலத்தில் 200க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





