--- --:--:-- --

ஒரு நாளைக்கு 20 முறை பவர் கட் ஆனதால் ஆத்திரத்தில் கவுன்சிலர் செய்த செயல்..!

8

ரு நாளைக்கு 20 முறை பவர் கட்டானதால் அதிருப்தி அடைந்த கவுன்சிலர் தன்னுடைய வார்டு மக்களின் மின் கட்டணத்தை சில்லரையாக கொடுத்து மின்வாரிய ஊழியர்களை பழிவாங்கிய தரமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு நாளைக்கு 20 க்கும் மேற்பட்ட முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

 

பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த கவுன்சிலர் தங்களுடைய வார்டை சேர்ந்த 70 வீட்டாருக்கான மின் கட்டணத்தை சில்லறையாக கொடுத்து மின்வாரிய ஊழியர்களை பழி வாங்கியுள்ளார். ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து பல மணிநேரம் சில்லறையை எண்ணி ரசீதையும் கொடுத்துள்ளனர்.

 

Right Menu Icon