--- --:--:-- --

தெலங்கானா: 2 ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து

1

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

கோவையிலிருந்து டெல்லி நிஜாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத் அருகே கச்சிக்குடா ரயில் நிலையத்தில் நின்று புறப்படத் துவங்கியது. அப்போது அதே தண்டவாளத்தின் எதிரே வந்த புறநகர் மின்சார ரயில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

 

இதில் புறநகர் மின்சார ரயிலின் பெட்டிகள் பல அடி உயரத்திற்கு எழும்பி தடம் புரண்டன. இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தவறான சிக்னல் தரப்பட்டதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon